இருசக்கர வாகனத்தில் காதலியுடன் இளைஞர் செய்த அலப்பறை..!
பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து இளைஞரை இளம் பெண் கட்டிப்பிடித்து பைக்கில் சென்ற சம்பவத்தில் 11 ஆயிரம் ரூபாய் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
டெல்லியில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு இளைஞரை கட்டிப்பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இருவரும் ஹெல்மெட் அணியாத நிலையில் முன்னாள் சென்ற வாகனத்தை அதிவேகத்தில் முந்தி செல்ல முயன்றதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சர்ச்சை வீடியோ டெல்லி போலீஸ் ஸ்டேஷன் கவனத்திற்கு சென்றது.
அதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண் கொண்டு அவரை அடையாளம் கண்ட போலீசார் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பதிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞருக்கு போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





