பட்டம் வாங்கிய மனைவி.. அழகுபடுத்திய கணவன்..!
ஆந்திராவில் ஏழை பெண் ஒருவர் அனந்தபுரம் கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகத்தில் சரியாக வரப்படாத தலை, ரப்பர் செருப்பு தன்னிடம் இருப்பதிலேயே கிழியாத ஒரு சேலையை அணிந்து கணவன் மகளுடன் மேடை ஏறி முனைவர் பட்டம் பெற்றார்.
ஆனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்ற அந்த பெண்ணை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் டூ படித்து வந்ததும் தாய்மாமன் சுகப்பிரசாத் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமணமான இரண்டு ஆண்டுகளில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பின் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை கூலி தொழிலாளியாக தமது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதன் பேரில் அவரை சிவப்பிரசாத் கல்லூரியில் சேர்த்தார்.
பாரதி வசித்த கிராமத்திலிருந்து கண்ணூரின் 38 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து அதற்காக முதல் 8 கிலோமீட்டர் நடந்து சென்று பின்னர் பேருந்து ஏறி படித்து வந்துள்ளார். பாரதி வேதியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று முடித்த பாரதி அதே பாடத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பிஎச்டி முடித்து விட்டதால் பல்கலைக்கழகம் மூலமே தனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பும் பாரதி அதனால் கிடைக்க இருக்கும் பொருளாதார வசதி தங்கள் சிறிய குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





