திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை பட்டியலை வெளியிட்ட உதயநிதி..!
திமுக இளைஞரணியின் செயலாளராக ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அடுத்த பாய்ச்சலுக்கான புது ரத்தம் என்ற தலைப்பில் கடிதம் ஒன்று எழுதியுள்ள உதயநிதி திமுக இளைஞரணிக்கான புதிய மாவட்ட மாநகர மாநில நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்களை பெற்று நேர்காணல் நடத்தி நீண்ட பரிசீலனைக்கு பிறகு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். விண்ணப்பித்த நான்கு 158 பேரில் 69 பேர் தேர்வாகி நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் வென்று திமுகவில் வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





