--- --:--:-- --

மணிப்பூரில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..!

7

மணிப்பூரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம்3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் மோதல் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதற்கு இணையதள சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது.

 

இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon