செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற பிரிவு காவல்துறை திட்டம்..!
வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை திட்டமிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சட்டப்பிரிவின் கீழ் மத்திய பிரிவு காவல் துறை புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் 178 பேருக்கு சம்மன் அனுப்பி 58 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உடல்நிலை சீரானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





