குழந்தையோடு வந்த இளம் பெண்.. அப்பா யாருன்னு தெரியாததால் அதிர்ச்சி…!
அடுத்தடுத்து மூவருடன் ஆன காதலால் கர்ப்பம் தரித்த பெண் குழந்தைக்கு தந்தை யாரென தெரியாமலேயே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வசித்து வரும் பட்டதாரி பெண் ஒருவர் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு கால் மூலம் இசக்கிமுத்து என்பவர் உடன் பழகி காதலித்து வந்துள்ளார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிரிந்த நிலையில் ஆறுதல் கூற வந்த இசக்கி முத்துவின் நண்பருடன் அந்த பட்டதாரிப் பெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவரும் அந்த பெண்ணை கைவிட்ட நிலையில் மூன்றாவதாக வேறொரு நபருடன் பட்டதாரி பெண் பழகியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இசக்கி முத்துவும் அவரது நண்பரும் மீண்டும் திரும்பி வந்து பெண்ணுடன் பழகியுள்ளனர். இந்நிலையில் பட்டதாரி பெண் கர்ப்பமாகி அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இதையடுத்து காதலித்த மூன்று பேருமே தனக்கும் குழந்தைகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி கைவிரித்ததால் அந்த பெண் போலீசில் தஞ்சமடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் பரிதாபமாக இருந்த அந்த பெண்ணின் குழந்தைக்கு மகளிர் காவலர்கள் புத்தாடை அணிவித்தும் கண் மை வைத்து, பாலூட்டி சீராட்டியது நெகிழ்ச்சி அடைய செய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





