16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுனர்..!
கடலூர் மாவட்டம் மங்களூரில் பள்ளி மாணவியை கடத்தி சென்று சென்னையில் குடும்பம் நடத்திய ஆட்டோ ஓட்டுனரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் காளிமுத்து. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் காளிமுத்துவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் மாணவியிடம் திருமண ஆசையை தூண்டி அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறிய காளிமுத்து சென்னை கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் தேடி வந்த போலீசாருக்கு சென்னை அசோக் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனே சென்னை விரைந்த போலீசார் மாணவியை மீட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





