இந்தியாவில் சாதி, மத பாகுபாடு இல்லை : பிரதமர் மோடி
இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவை விட இந்தியாவுடன் அமெரிக்கா சிறந்த நட்புறவை கொண்டுள்ளதாக அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோபேடனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது என்றும் தங்களுக்குள் இருக்கும் வர்த்தகரீதியான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து வருவதாக மோடி குறிப்பிட்டார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகம் தான் இரு நாடுகளிலும் முதன்மையானது எனவும் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது எனவும் மோடி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





