--- --:--:-- --

5 ஆண்டுகளில் கர்ப்பமான பெண்.. காவல் நிலையத்தில் திருமணம்..!

8

காஞ்சிபுரம் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள கோயிலில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

 

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் ரோஜா கர்ப்பமானதால் அவர் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து ரோஜாவின் குடும்பத்தினர் எஸ் பி அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி காதல் ஜோடிக்கு எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடத்தி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon