--- --:--:-- --

லிவிங் டுகெதர்..ஏமாற்றிய காதலன்.. குடும்பத்துடன் தர்ணா செய்த பெண்..!

7

சேலத்தில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த காதலர்கள் திருமண வாழ்க்கை வேண்டும் என பெண்ணும், திருமண வாழ்க்கை வேண்டாம் என ஆணும் தனித்தனியாக போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், தீபிகாவும் instagram மூலம் பழகி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

 

மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக காதல் மனைவி தீபிகாவிடம் விக்னேஷ் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

 

தீபிகா தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் செய்ததை எடுத்து அவர் திருமணம் செய்துள்ளார். இருந்தும் அவர் வாழ விருப்பம் இல்லாமல் தீபிகாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த தீபிகா காதல் கணவன் வீட்டில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதை அறிந்த விக்னேஷ் தனது பெற்றோருடன் அனைத்து மகளிருக்க காவல் நிலையத்தில் தமிழரசி தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் அவர்கள் கலந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon