--- --:--:-- --

ரயில் நிலையத்தில் தீ விபத்து.. பொதுமக்கள் அச்சம்..!

9

அரக்கோணம் பயணிகள் நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் மேற்கூரையில் திடீரென தீ பற்றி எரிந்தது.

 

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon