--- --:--:-- --

மீண்டும் கேரளாவில் படகு விபத்து.. இருவர் பலி..!

10

கேரள மாநிலம் கோட்டையம் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். முதலாபுரம் பகுதியை சேர்ந்த சரத் என்பவர் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை அழைத்துக் கொண்டு வைக்கம் நோக்கி படகில் சென்றார்.

 

அப்பொழுது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நான்கு பேரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

கேரளாவில் ஏற்கனவே சுற்றுலா படகு
கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் படகு கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon