--- --:--:-- --

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..!

2

சாம் மாநிலம் தவ்ஹாத்தியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. தவ்ஹாதியில் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்த சாலையில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

 

மேடு பள்ளம் தெரியாத வகையில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் ஆட்டோ திடீர் என கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோவில் இருந்த மாணவி மாணவிகளை மீட்டனர்.

 

ஆட்டோ விபத்துக்குள்ளானதற்கு முன்னதாக அதே சாலையில் பள்ளி மாணவி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon