--- --:--:-- --

திருமணம் கடந்த உறவு.. ஒருவரை கொன்று கழுவி நீர் தொட்டிக்குள் வீசிய மூவர் கைது..!

7

தென்காசி மாவட்டம் நிலத்தூரில் திருமணம் கடந்த உறவு தொடர்பாக ஒருவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசியதாக பெண்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

லக்ஷ்மணன் என்பவரது வீட்டில் கடந்த ஞாயிறு அன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பொழுது எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை கைப்பற்றி தடையவியல் சோதனை நடத்திய பொழுது அந்த எலும்புக்கூடு அதே பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மது என்கிற மாடசாமி உடையது என்பது தெரிய வந்தது.

 

போலீசார் விசாரித்த பொழுது இறந்த மதுவுக்கும் லக்ஷ்மணனின் வீட்டில் முன்பு வாடகைக்கு குடியிருந்த பிரியா என்ற பேச்சியம்மாளுக்கும் திருமணம் கடந்த உறவு இருந்தது என்று தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

 

இதன் பேரில் பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அதில் மதுவுக்கும் தனக்கும் திருமணம் கடந்த தொடர்பு இருந்து வந்ததாகவும் குடும்பத்தை விட்டு தன்னுடன் வருமாறு மது வலுக்கட்டாயமாக அழைத்ததால் அவரை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசியதாகவும் பிரியா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

இதன் பேரில் பிரியா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மாரியம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon