மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்.. மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை..!

த்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்களுடைய போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

 

பாலியல் புகாருக்குள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிட்ஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் சந்தித்தனர்.

 

அப்பொழுது பிரிட்ஜ் பூசனை கைது செய்ய வேண்டும் என அனுராக்கிடம் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா தங்களது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று வரும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அனுராக் தாக்கர் தங்களிடம் கூறியதாக பஜ்ரங் புனியா தெரிவித்தார். மேலும் புகார் அளித்த வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.