அரசு பேருந்தை ஓட்டி சென்ற போதை ஆசாமி..!
வீட்டிற்கு செல்ல பேருந்து கிடைக்காததால் நின்றிருந்த அரசு பேருந்தை போதை ஆசாமி ஒருவர் எடுத்துச் சென்ற ருசிகர சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் நபர் தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு மது அருந்தியுள்ளார்.
இதன் பின் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்தவர் தனது சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் வெகுநேரமாகிவிட்டதால் அங்கிருந்த ஒரு அரசு பேருந்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அதுபோல இருந்தால் பேருந்தை சரிவர இயக்க முடியாமல் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏற்றி விபத்தை உண்டாக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





