--- --:--:-- --

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீக்குளிக்க முயன்ற இளம் பெண்..!

10

சென்னையில் காதலிக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி.

 

கல்லூரி மாணவியான இவர் மாத்தூர் பகுதியை சேர்ந்த மகேசன் என்பவரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

இதனால் மன உளைச்சலடைந்த ஆர்த்தி அதிகாலை நேரத்தில் மண்ணெணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

 

அவரின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் உடனடியாக ஆர்த்தியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon