--- --:--:-- --

அப்படி ஒரு ரிலேஷன்ஷிப் எனக்கு தேவையில்ல.. கோபமாக பேசிய அஞ்சலி..!

12

ங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. அவருக்கு தற்போது தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

 

அஞ்சலி ஒரு பிரபல நடிகர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட நிலையில், அதன் பின் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்றும் தகவல் வந்தது.

 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிலேஷன்ஷிப் பற்றி அஞ்சலி பேசி இருக்கிறார். “ஒரு ரிலேஷன்ஷிப்பில் respect ரொம்ப முக்கியம், அதன் பின் தான் லவ், அன்பு எல்லாம் என நான் நினைக்கிறேன். அது இல்லை என்றால் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப் எனக்கு தேவை இல்லை.”

 

“கெரியரா இல்லை ரிலேஷன்ஷிப்பா? என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால் அது toxic relationship. ஒரு ஆண் வேலைக்கு போக முடியும் என்றால் பெண்ணாலும் முடியும். கல்யாணமாகி குழந்தையுடன் கூட பலர் படங்களில் நடித்து கொண்டிருகிறார்கள்” என அஞ்சலி கூறி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon