--- --:--:-- --

ரயில் விபத்து – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகுவாரா..?

1

டிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயிலும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

மீட்பு பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன. தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்திற்கு ஏற்கனவே மத்திய அமைச்சர், பிற மாநில முதலமைச்சர்கள் வந்திருந்த நிலையில் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று இருக்கிறார்.

 

மத்திய ரயில்வே துறை அமைச்சர் கூடுதல் விவரங்களை கேட்டறிந்து வருகிறார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

அங்கு மருத்துவமனைக்கும் சென்று நேரடியாக கள நிலவரம் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் விபத்து குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டு கொள்ளாததால் பதவி விலகுவாரா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon