--- --:--:-- --

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் கைது..!

5

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சேலம் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஓசூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 

கடந்த வாரம் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர் ஞாயிறு இரவு ராமநாதபுரம் ஹூப்ளி வாராந்தரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தந்தையுடன் ஓசூருக்கு திரும்பியுள்ளார்.

 

ரயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அவர் படுத்திருந்த பர்த்தின் மேற்பரப்பு படுத்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர் கீழே இறங்கி இளம் பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

அவரது பெயர் சையது இப்ராஹிம் என்பதும் சேலம் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்த இப்ராஹீம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon