--- --:--:-- --

உடம்பில் ரத்த காயத்துடன் நடுரோட்டில் படுத்து உறங்கிய குடிமகன்..!

4

கோவையில் இருந்து மதுரை செல்லும் நபர் ஒருவர் நடுரோட்டில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரு உள் விளையாட்டு அரங்கம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அருகே அதிக மதிபோதையில் நபர் ஒருவர் நடுரோட்டில் படுத்துறங்கியுள்ளார்.

 

முதலில் அவர் எழுந்து விடுவார் என பலரும் எழுப்பிய நிலையில் எழுந்திருக்காமலேயே இருந்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் தலையில் ரத்த காயங்கள் இருந்ததாகவும் அதிகம் மது போதையில் இருந்ததாலும் அவரை நெருங்க இயலாமல் போனது.

 

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த மக்கள் அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். மதுபோதையில் நடுரோட்டில் படுத்து உறங்கிய நபரால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon