காதில் ப்ளூடூத் அணிந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய இளைஞர்..!
காட்பாடியில் காதல் ப்ளூடூத் அணிந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய வேலூர் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு கடந்த 27ஆம் தேதி வேலூரில் 10 மையங்களில் நடைபெற்றது.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை சேர்ந்த அப்துல் பயாஸ் என்ற இளைஞர் காதில் அடிபட்டுள்ளதாக கூறி காதில் கட்டு போட்டு தேர்வு மையத்திற்குள் சென்றுள்ளார்.
தேர்வு எழுதும் பொழுது அவர் பேசிக் கொண்டிருப்பதை கண்ட கண்காணிப்பாளர் சந்தேகம் அடைந்து சோதனை செய்த பொழுது அவர் காதில் ப்ளூடூத், ஏர்பார்ட் அணிந்திருந்தது தெரிய வந்திருந்தது. அவரை தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றினார்.
இது குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த காட்பாடி போலீசார் தலைமறைவாக உள்ள அப்துல் பயாசை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





