--- --:--:-- --

திருநம்பி ஆணழகன் விஷம் குடித்து தற்கொலை..!

10

கேரளாவின் முதல் திருநம்பி ஆணழகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருநம்பி ஆணழகன் திருநம்பியாக இருந்து ஆணழகன் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றதன் மூலம் கேரளா முழுவதும் பிரபலமானார்.

 

கடந்த காதலர் தினத்தன்று பிரவீனாத் திருநங்கை ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களாக பிரவீனாத் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார்.

 

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிரவீனாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon