காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஓடிய மூன்று சிறுவர்களை கொன்ற இந்தியர்..!
அமெரிக்காவில் வீட்டின் காலிங் பெல்லை அடித்து பிராங்க் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்களை வீட்டின் உரிமையாளர் கார் ஏற்றிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் அனுராக்சந்திரா.
இவரது வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து பிராங்க் விளையாட்டில் சில சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர் சிறுவர்களை கேமராவில் கண்காணித்த நிலையில் காலிங் பெல்லை அடித்து தப்பியோடியவர்களை விரட்டி சென்றுள்ளார்.
\
மேலும் சிறுவர்கள் மீது வீட்டின் உரிமையாளர் காரை ஏற்றியதில் மூன்று சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சம்பவத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





