பெட்ரோல் திருட போன பைக்கில் பெட்ரோல் இல்லாததால் ஆத்திரத்தில் பைக்கை தீ வைத்து எரித்த கொடூரம்..!
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருட முயற்சித்த பொழுது அதில் பெட்ரோல் இல்லாததால் பைக்கை எரித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐடி ஊழியர் ஆன ஹரிஹரன் இரவில் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த பொழுது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த தானமூர்த்தி, ராம்கி ஆகியோரை கைது செய்தனர். எந்தவிதமான முன் விரோதமும் இன்றி பைக்கை எரித்தது ஏன் என போலீசார் விசாரித்தனர்.
அதற்கு தங்களின் பைக்கில் பெட்ரோல் இல்லாததால் ஹரியின் பைக்கில் இருந்து பெட்ரோலை திருட வந்ததாகவும் ஆனால் அந்த பைக்கிலும் பெட்ரோல் இல்லாததால் ஆத்திரத்தில் தீ வைத்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





