--- --:--:-- --

காலிஃப்ளவர் தோசையில் கிடந்த கரப்பான் பூச்சி..!

4

கோவையில் பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள பிரபல சைவ உணவகத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது காலிஃப்ளவர் தோசை ஆர்டர் செய்துள்ளார். அதை சாப்பிட முற்பட்டபோது அதனுள் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இது தொடர்பான கேள்விக்கு ஊழியர்கள் சாதாரணமாக பதில் அளித்த நிலையில் அதிர்ச்சி அடைந்தவர் உணவு சமையல் கூடத்தை முழுமையாக தூய்மைப்படுத்த சொல்லிவிட்டு சாப்பிடாமல் வெளியேறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon