--- --:--:-- --

பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி அடித்த மாணவனின் தாய், தந்தை, தாத்தா கைது..!

9

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளிக்குள் புகுந்து கொண்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தாக்கிய பெற்றோர் மற்றும் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் இவர்.

 

அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் தாக்கியுள்ளனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கிய இவர்கள் பள்ளியில் உள்ள மேஜையின் நாற்காலிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

 

இது தொடர்பாக தலைமையாசிரியர் அளித்த புகாரியின் அடிப்படையில் மாணவனின் தந்தை தாத்தா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

 

விசாரணையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மாணவர் வீட்டுப்பாடம் செய்யாததை கண்டித்து தான் ஆசிரியர் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மூன்று பேரையும் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon