--- --:--:-- --

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!

1

விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் டவர் மூலம் குற்றவாளிகளை போலீசார் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இதுவரை 13 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த செம்மேடு பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

விழுப்புரம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon