--- --:--:-- --

எனது நாட்கள் எண்ணப்படுவதாக கூறுகின்றனர் : பிரதமர் மோடி

8.1

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், தமது நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக கூறுவதாகவும் ஆனால் மக்கள் தாமரை தொடர்ந்து வளரும் என வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில சட்டப்பேரவையில் வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 

பேரணி ஷில்லங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலை பேரணியில் பங்கேற்றார். பேரணியில் இருபுறமும் திரண்டு நின்ற தொண்டர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி வாரிசு அரசியலில் பிடியிலிருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும் என்றார்.

 

மக்களால் நிராகரிக்கப்பட்டு விரக்தியின் குழுவில் உள்ள சிலர் தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார். மேகாலயாவில் எங்கு பார்த்தாலும் பாஜக காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon