திமுகவுக்கு எச்சரிக்கைa விடுத்த இபிஎஸ்..!
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களை சந்திக்க விடாமல் அடைத்து வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுகவின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும் திமுகவினர் வாக்காளர்களை சந்திக்க விடாமல் அடைத்து வைத்தால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





