--- --:--:-- --

சுற்றி திரியும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு..!

1

கோவை மாநகர பகுதிகளில் வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து வீதிகளில் சுற்றி தெரியும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றி தெரியும் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

இதனால் இன்று மாலைக்குள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக கலின், சின்னத்தம்பி, முத்து ஆகிய மூன்று கும்கி யானைகள் கோவைக்கு .அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

வனத்துறையினருடன் மருத்துவ குழுவினரும் இணைந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon