அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் திடீர் முடிவு..!
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை வரும் 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவற்றில் செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேதா விசாரணையை அடுத்த காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்பொழுது குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு பட்டியலாகவில்லை என்றும் அமலாக்கத்துறை வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணை பட்டியல் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கிருஷ்ணா தொடர்ந்து ஏன் கால அவகாசம் கோரி விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள் என துஷார் மேத்தாவிடம் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் 20ஆம் தேதி பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





