நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை..!
சென்னை அருகே நான்கு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
பல்லாவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் வட மாநில இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு விசாரித்த பொழுது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அனைத்து மகளிர் போலீசார் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





