வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞர்..! ஸ்கேனில் வெளிவந்த அதிர்ச்சி..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து பல் துலக்கும் பிரஸ், பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.
சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான குடிப்பழக்கத்தின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
பின் வயிற்று வலி காரணமாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்றில் பல பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மன உளைச்சல் காரணமாக அந்த இளைஞர் பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்டவற்றை முழுங்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





