கடைசி ஆசையாக விமானத்தில் ஏறி விட்டு தற்கொலை செய்த இளைஞர்..!
விமானத்தை பார்ப்பதையே கடைசி ஆசையாக கொண்டிருந்த நிலையில் விமானத்தில் சென்று விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாலத்திற்கு அருகே இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இளைஞர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
எனினும் உயிரிழந்த இளைஞரின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தின் மூலம் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரிய வந்தது.
மேலும் கடிதத்தில் விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை என்றும் அதன் காரணமாக விமான மூலம் மும்பை வந்ததாக எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





