காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவன்..!
மதுரையில் பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். தெற்கு வாசலை சேர்ந்த வர்ஷா என்பவர் தனது கணவர் பழனி நகை பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சாலை நடந்து சென்ற வர்ஷாவை பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் தப்பி சென்ற பழனியை கைது செய்தனர். குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கொன்றதாக பழனி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





