அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்..கல்லால் தாக்கி கொண்ட சம்பவம்..!

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலின் பொழுது சக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிளஸ் டூ மாணவன் கல்லால் தாக்க முயற்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

 

புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

 

இந்த பள்ளியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

அப்பொழுது பிளஸ் டூ மாணவர் ஒருவர் கல்லை எடுத்துக்கொண்டு சக மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த மோதல் சம்பவம் சம்பந்தமாக புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.