அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய பகுதியில் கிழக்குப் பகுதியில், மேற்கு வட மேற்கு திசையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் நாளை மறுநாள் இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





