நடிகை சமந்தாவின் முகம் மாறிவிட்டதா.. ஒரே ஒரு புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம்..!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார்.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பழைபடி மீண்டு வருகிறார். சமந்தா நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா பழைபடி தொடர்ந்து புகைப்படங்கள் மட்டுமே வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மயோசிட்டிஸ் நோய்க்கு பின் சமந்தாவின் முகம் மாறிவிட்டது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




