--- --:--:-- --

காலையில் மிதமான மழை.. இரவில் உறை பனி..!

3

தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

 

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை முதல் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon