--- --:--:-- --

மண மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகள்.. அதிர்ந்து போன மனமகன்..!

10

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது திடீரென மயங்கி விழுந்து 19 வயது இளம் பெண் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பதாயிக்கரை எனும் பகுதியை சேர்ந்த முஸ்தபா – ஜீனத் தம்பதியினரின் மகள் 19 வயதான பாத்திமா என்பவருக்கு மூக்க நாடு என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.

 

திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. புத்தம் புது ஆடையுடன் புதிய வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் சந்தோஷத்துடன் குடும்பத்தாருடன் பாத்திமா போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீர் என பாத்திமா மயங்கி விழுந்துள்ளார்.

 

இதையடுத்து பயந்து போன வீட்டார் உடனடியாக மணப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு இளம் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், இசிஜி போன்ற மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டாலும் மயக்கத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மொத்த குடும்பத்தாரையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon