--- --:--:-- --

ஒளி வெள்ளத்தை கண்டு சுருண்டு கொண்ட பாம்பு..!

3

ஒளி வெள்ளத்தை கண்டு பாம்பு சுருண்டு கொண்டது இணையத்தை ஈர்த்து வருகிறது. சீன புத்தாண்டு சீனாவில் மட்டுமல்லாமல் தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

 

சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழா என்று அழைக்கப்படும் இந்த புத்தாண்டு சீனாவின் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். சீன புத்தாண்டு ஜனவரி 21 ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் வரும். அந்த வகையில் ஜனவரி 22ஆம் தேதி சீன புத்தாண்டு வருகிறது.

 

அதனை கொண்டாட சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள பகுதியில் ஒலி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு குடும்பம் குடும்பமாக கூடி கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் ஐந்து மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கயிற்றில் மலை பாம்பு சுருண்டு கிடந்ததை கண்டு அனைவரும் பயத்தில் உறைந்தனர்.

 

இந்த தகவலறிந்து விரைந்து வந்த விலங்குகள் நல ஆய்வு மையம் அதனை பத்திரமாக மீட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon