--- --:--:-- --

கண்களை கட்டிக்கொண்டு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்..!

1

பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர் விரைவில் பணி வழங்க கோரி மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவத் தேர்வாணையத்தின் வாயிலாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர் கடந்த 31ஆம் தேதியுடன் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்து மாவட்டம் தோறும் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் கண்களை கட்டிக்கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon