தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா..விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கல்..!

ர் இந்தியா விமானத்தில் பெண்மணி ஒருவர் வாங்கிய உணவில் கற்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபல பத்திரிகையாளர் சண்முக பிரியா என்பவர் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பொழுது அவர் வாங்கிய உணவில் கற்கள் இருந்தது அவரை அதிர்ச்சி அடைய செய்தது.

 

இதையடுத்து அவரது இந்த ட்விட்டர் பக்கத்தில் கள் இல்லாத உணவை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர் பயணம் செய்த ஏர் 15 விமானத்தில் உணவில் இவை எனக்கு கிடைத்தது என்று கூறி உணவைப் பெட்டியில் கற்கள் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

மேலும் இதுபோன்ற அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இதை உடனடியாக நாங்கள் சரி செய்து கொள்கிறோம் என்றும் இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுகிறோம் எனவும் அவருக்கு பதில் அளித்துள்ளது.

 

இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.