--- --:--:-- --

2023 – 2024 முந்தைய பட்ஜெட் கூட்டம் நிறைவு..!

4

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நவம்பர் 21 முதல் 28ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

மொத்தம் எட்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஏழு குழுக்களை சேர்ந்த 110 பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர். வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை, நிதித்துறை மற்றும் முதலீட்டு சந்தைகள் பொருளாதார வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருடன் ஆலோசனை நடைபெற்றது.

 

நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான பசுமை சான்றிதழ் வழங்குதல், நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம், உள்நாட்டு விநியோகம் சங்கிலியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின் இந்த ஆலோசனைகள் கவனத்திற்கு பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon