--- --:--:-- --

திருநங்கையின் பி.எச்.டி. கனவுக்கு முட்டுக்கட்டை போட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்..!

5

திருநங்கையின் பி.எச்.டி.கனவுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முட்டுக்கட்டை போட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. முனைவர் பட்டம் பெறக்கூடாது என வேதியல் துணைத் தலைவர் ஜெயபாரதி தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கடலூர் பகுதியை சேர்ந்த திருநங்கை ரக்ஷிதா அண்ணாமலை பல்கலைக்கழக துறையில் முனைவர் பட்டம் பயில விண்ணப்பித்துள்ளார். அப்பொழுது வேதியல் துறை தலைவர் ஜெயபாரதி, திருநங்கைக்கு வழிகாட்டி ஆசிரியர் இருப்பது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளார்.

 

எனவே வேறு கல்லூரிக்கு செல்லுமாறு கூறுகிறார். வேண்டும் என்றால் எங்களை ஒரு ஆசிரியராக தேர்வு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். பின்னர் திருநங்கை ரக்ஷிதா பல்வேறு ஆசிரியர்களிடம் கூறிய நிலையில் அவருக்கு வழிகாட்டி ஆசிரியர் கிடைத்துள்ளார்.

 

ஆனால் அதனை ஏற்க வேதியியல் துறை தலைவர் ஜெயபாரதி தடுத்ததால் அதிர்ச்சி அடைந்த ரக்ஷிதா தன் முனைவர் பட்டம் பகிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட துணைவேந்தர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon