--- --:--:-- --

மாந்திரீகம் என்ற பெயரில் உயிருடன் சித்திரவதை செய்த கணவன்..!

3

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மாந்திரீகம் என்ற பெயரில் மனைவியை கட்டி வைத்து வாளால் தாக்கி சித்திரவதை செய்து வந்த கணவன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் கருவட்டான் பகுதியை சேர்ந்த பெண்ணை ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

 

திருமணமான நாள் முதல் மனைவி மீது பேய் குடி கொண்டிருப்பதாக கூறி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் உறவினர்களான சிபு, ஷானிக்கா தம்பதியின் வழிகாட்டுதல் படியும் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த மந்திரவாதிகளான சுலைமான், ஹிமாமுதீன், அன்வர் உசேன் ஆகியோரே வரவழைத்து மனைவியை கட்டிப்போட்டு கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தம்மை வாளால் வெட்டி ரத்தம் எடுத்து மாந்திரீகம் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அனீஸ் மற்றும் அவனுடன் இணைந்து துன்புறுத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon