திடீரென பெயர்ந்து விழுந்த ராட்சத பாறை..!
திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்த்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தான் வெளியாகியுள்ளது. கனமழையின் பொழுது ஏற்பட்ட இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலைக்கோட்டையில் இருந்த பெரிய அளவிலான பாறை ஒன்று அசுர வேகத்தில் கீழே விழுந்துள்ளது. அடிவாரத்தில் இருந்த இரண்டு பெண்கள் இந்த விபத்தில் இருந்து நூலிழையில் தப்பினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்த நி லையில் இருந்து கல் பெயர்ந்து விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





