சாதியை குறிப்பிட்டு பெண்ணை திட்டிய காவலர்..!
திருப்பூரில் சாதியைகுறிப்பிட்டு பெண்ணை திட்டிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த அருண்குமார் அவிநாசி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆக இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதை மறைத்து அவிநாசியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. தன்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என அந்த பெண்ணிடம் கூறி அருண் குமார் அவரது சாதியை சொல்லித் திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமடைந்த அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. அது குறித்த புகாரில் காவலர் அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





