வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!
பிறந்த குழந்தைக்கு வால் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறவியிலேயே உடல் உறுப்புகள் அசாதாரணமாக அமைந்து விடுவது உலக அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. அப்படி மெக்சிகோவில் அண்மையில் பிறந்த பெண் குழந்தைக்கு வாலும் இருந்துள்ளது.
அந்த குழந்தையின் தாய் கருவுற்றிருந்த பொழுது எந்தவித கதிர்வீச்சு பாதிப்போ, தொற்று பாதிப்பு ஏற்படாத போதும் இப்படி ஒரு ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது மருத்துவர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. அந்த வால் 5.7 சென்டிமீட்டர் நீளமும் 3 முதல் 5 மில்லி மீட்டர் வரை அகலம் கொண்டதாக இருந்துள்ளது. அந்த பகுதி விலங்குகளை போல முடிகளையும் கொண்டு இருந்துள்ளது.
மருத்துவர்கள் இரண்டு மாத மருத்துவ கண்காணிப்பிற்கு பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். அந்த இடத்தில் புதிய திசுக்கள் வளரும் வகையில் சிகிச்சையும் மேற்கொண்டனர். இரண்டு மாத சிகிச்சைக்கு பி குழந்தை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





